ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:40 IST)

விஜய் பட நடிகை மீதான தடை நீக்கம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை இலியானா, இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் போக்கிரி படத்தின் மூலம் அறிமுகமானார்.  அதன்பின்னர், முன்னா, ஜெய்சா, கிக், சலீம், சக்தி,  உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

தமிழில் கேடி என்ற  திரைப்படம் மூலமாக  அறிமுகமான இலியானா, விஜய் – ஷங்கர் கூட்டணியில் உருவான நண்பன் படத்தில்  நடித்திருந்தார்.

இப்படத்திற்குப் பின் அவர் ஒரு படத்திற்கு முன்பணம் பெற்றுக் கொண்டு அப்படத்தில் நடிக்கவில்ல்லை ; பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று மீடியாவில் செய்தி வெளியாகின.

இதையடுத்து,  நடிகை இலியானா  சினிமாவில் நடிக்க தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்திருந்தது.

எனவே, அவர், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில், நடிகை இலியானா இப்பிரச்சனையை பேசித் தீர்த்துவிட்டதாகவும்,இனி அவர் இரு மொழி சினிமாவில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.