1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva

வீட்டை விட்டு திடீரென வெளியேற்றப்பட்ட நடிகை விஜயலட்சுமி: என்ன காரணம்?

விஜய், சூர்யா நடித்த ஃப்ரண்ட்ஸ் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவருக்கும் சீமானுக்கும் கடந்த பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விஜயலட்சுமி குடியிருந்த அப்பார்ட்மெண்ட் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக வீட்டை பூட்டிவிட்டு ஊரில் இல்லை என்றும் திரும்பி வந்து பார்க்கும்போது அவருடைய அப்பார்ட்மெண்டில் வேறொரு குடியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்
 
இதுகுறித்து அவர் விசாரித்தபோது மூன்று மாதங்களாக நடிகை விஜயலட்சுமி வாடகை கொடுக்காததால் அப்பார்ட்மெண்ட் உரிமையாளர் அவருடைய வீட்டை காலி செய்து பொருள்களை பக்கத்து அறையில் வைத்துவிட்டு வேறு நபருக்கு வாடகைக்கு விட்டு விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
இதுகுறித்து தனக்கு நீதி வேண்டும் என விஜயலட்சுமி பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தபோது அவரை சமாதானப்படுத்திய காவல்துறையினர் அவருக்கு மாற்று இடத்தை தற்காலிகமாக தங்க ஏற்பாடு செய்துள்ளனர் இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது