திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2019 (13:39 IST)

நடிகை ஸ்ரீரெட்டி வீடு புகுந்து தாக்குதல் – மர்மநபர்கள் மீது புகார் !

பரபரப்பாக பல பாலியல் புகார்களைக் கூறிய தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியை மர்மநபர்கள் சிலர் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திய தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் மீதும் வரிசையாக பாலியல் புகார் கூறினார் ஸ்ரீ ரெட்டி. நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சுந்தர்.சி  ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பைக் கிளப்பினார். அது மட்டுமல்லாமல் அவ்வபோது சமூகவலைதளங்களில் தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களான பவன் கல்யாண் உள்ளிட்ட சிலரைக் கேலி செய்து பதிவுகளையும் பகிர்ந்து வந்தார்.

இந்த புகார்களை அடுத்து அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்தன. இதையடுத்து அவர் தற்போது சென்னையில் வசித்துக்கொண்டு சில தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் மர்மநபர்கள் சிலர் அவர் வசிக்கும் வளசரவாக்கம் வீட்டுக்குள் புகுந்து அவரைத் தாக்கியதாகவும் அதையடுத்து அவர்கள் மீது ஸ்ரீ ரெட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.