புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 13 டிசம்பர் 2018 (12:12 IST)

பாலியல் புகார் கூறி வாய்ப்புகளை இழந்த நடிகை

தமிழில், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன். இவர் 2015ம் ஆண்டில் நிபுணன் என்ற படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக சுருதி ஹரிகரன் நடித்தார். 
இந்த படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து உடலை தடவியதாக நடிகர் அர்ஜுன் மீது சுருதி ஹரிகரன் குற்றம் சாட்டினார். இதனை  திட்டவட்டமாக நடிகர் அர்ஜுன் மறுத்தார். இதற்கிடையே அர்ஜுன் மீது சுருதி ஹரிகரன் போலீசில், புகார் அளித்தார்.
 
இந்த புகார் தொடர்பாக அர்ஜுன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த நிலையில் ‘மீ டூ’ புகார் சொன்ன சுருதிஹரிகரனுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
 
இதுகுறித்து சுருதிஹரிகரன் கூறும்போது, "நான் மீ டூவில் பாலியல் புகார் கூறியதற்கு முன்னால் வாரத்துக்கு 3 படங்களில் நடிக்க வாய்ப்புகள்  வந்தன. ஆனால் புகார் சொன்ன பிறகு யாரும் வரவில்லை. பட வாய்ப்புகள் முழுமையாக நின்று விட்டன." என்றார்.