"தர்பார்" செட்டில் நடிகை ஸ்ரேயா - ரஜினியுடன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா?

Papiksha| Last Updated: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (13:15 IST)
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.


 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. மேலும் அடிக்கடி படப்பிடிப்பு தலத்தில் இருந்து புகைப்படங்களும் , வீடியோக்களும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்து வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், தர்பார் படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் ஆகியோருடன் நடிகை ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது. இதை கண்ட ரசிகர்கள் தர்பார் படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் என கூறி வருகின்றனர். ஆனால், அந்த புகைப்படத்தை பார்த்தால் ஸ்ரேயா சாதாரணமான உடையணிந்து ரஜினியை பார்க்க விசிட் அடித்தது தெரிகிறது. மேலும் அவர்  படத்தில் நடிக்கவில்லை என்றும் நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. 
 
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த  "சிவாஜி" படத்தில் நடிகை ஸ்ரேயா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :