ரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

Last Modified வெள்ளி, 11 அக்டோபர் 2019 (10:49 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாக உள்ள நிலையில் அவருடைய அடுத்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் அல்லது லைக்கா நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் அடுத்த படம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து எந்திரன் மற்றும் பேட்ட ஆகிய இரண்டு திரைப்படங்களும் பின் மூன்றாவது முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ரஜினிகாந்த் இணைகிறார் என்பதும் ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா ஆகிய இருவரும் முதல் முறையாக நினைக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

சிறுத்தை சிவா பாணியில் குடும்பம் மற்றும் சென்டிமென்ட் கலந்த ஒரு கிராமியக் கதை தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுவதால் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு கிராமத்து கதையில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :