பதம் பூஷன் விருது பெற்றவர்களுக்கு நாளைப் பாராட்டு விழா… அஜித் கலந்துகொள்ள மாட்டாரா?
இந்தியாவின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித் குமாருக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் செய்த சேவைக்காக அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது. இந்த விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் திரையுலக பிரபலங்களும் அவரது ரசிகர்களும் வாழ்த்து மழைப் பொழிந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்த பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நாளை பாராட்டு விழா ஒன்றை கவர்னர் மாளிகையில் நடத்துகிறார். அதில் அஜித் கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் கார் பந்தயப் பயிற்சிக்காக இப்போது அஜித் ஐரோப்பாவில் இருப்பதால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது. இதை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது உறுதிப் படுத்தியுள்ளார்.