திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 17 அக்டோபர் 2018 (19:31 IST)

நடிகை பிரணிதா சுபாஷ் பிறந்த தினம் இன்று

சகுனி படம் மூலம் பிரபலம் ஆன நடிகை பிரணிதா சுபாஷ் பிறந்த தினம் இன்று. இவர் அக்டோபர் 17, 1992 ஆம் ஆண்டு பிறந்தார். 



2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார்.

நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உதயன், சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் பிரணிதா, அதற்காக சமீபத்தில் ஆப் அறிமுகம் செய்தார். கன்னடத்தில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார்.  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரணிதா!