செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 4 மே 2020 (17:38 IST)

கொரோனா வைரஸோடு வாழுவோம்: கெஜ்ரிவால் நிலைபாடு என்ன?

கொரோனா பாதிப்பே இல்லை என்ற நிலை தற்போது சாத்தியமாகாது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,533 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்ச பாதிப்பு மகாராஷ்டிராவிலும், அடுத்தடுத்து குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் உள்ளது. 
 
இந்நிலையில் இன்று காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, டெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மட்டுமே சிவப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும், ஒட்டு மொத்த மாவட்டத்தையும் அறிவிக்க கூடாது எனவும் மத்திய அரசு பரிந்துரைந்துள்ளது. 
 
கொரோனா பாதிப்பே இல்லை என்ற நிலை தற்போது சாத்தியமாகாது. டெல்லியை திறந்துவிடும் நேரம் வந்துவிட்டது. கொரோனா வைரஸுடன் வாழ தயாராக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.