1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (15:07 IST)

சென்னை மேயரை சந்தித்த நடிகை நயன்தாரா!

சென்னை மேயரை சந்தித்த நடிகை நயன்தாரா!
சமீபத்தில் சென்னை மேயராக பதவி ஏற்ற ப்ரியா ராஜனை, நடிகை நயன்தாரா சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை மேயராக பதவி ஏற்ற ப்ரியா ராஜன் சற்று முன்னர் சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அதேபோல் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவும் அதே கோவிலுக்கு வந்துள்ளார்.
 
அப்போது நயன்தாரா சென்னை மேயரை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மேயரை  நயன்தாரா சந்தித்த நிகழ்வை அந்த பகுதியில் உள்ளவர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.