திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (16:55 IST)

சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய நயன்தாரா…!

நடிகை நயன்தாரா அடுத்து நடிக்க உள்ள படத்துக்காக 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம்.

நயன்தாரா சினிமாவில் இருந்து விலகலாம் என 2012 ஆம் ஆண்டு முடிவு செய்து மும்பையிலேயே செட்டில் ஆகி இருந்தார். அப்போது அவரை மறுபடியும் சினிமாவுக்கு தன்னுடைய ராஜா ராணி படத்தின் மூலம் அழைத்து வந்தார். அப்போது இருந்தே அட்லிக்கு நயன்தாரா மேல் பாசமும் அன்பும் இருந்து வருகிறது. இதையடுத்து இப்போது அட்லியின் உதவியாளர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்துக்காக நயன்தாரா இதுவரை இல்லாத அளவுக்கு சம்பளம் பெற்றுள்ளார். வரிசையாக அவர் நடிக்கும் படங்கள் ஹிட்டாகி வரும் நிலையில் இந்த படத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம்.