வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 18 அக்டோபர் 2023 (16:03 IST)

லியோ படம் வெளியாவதையொட்டி அன்னதானம்- புஸ்ஸி ஆனந்த்

vijay makkal iyakkam
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் வரும் (அக்டோபர் 19 ஆம் தேதி) நாளை ரிலீஸாகவுள்ளது.

இந்த  நிலையில், தளபதி விஜய் அவர்களின்  வாழ்த்துக்களோடு, LEO திரைப்படம் திரைக்கு வருவதை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில்,

‘’மத்தியசென்னை மாவட்ட வில்லிவாக்கம் மேற்கு பகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம்
சார்பாக, ஸ்ரீபாளியம்மன் திருக்கோவிலில் தளபதியின் லியோ  திரைப்படம் திரைக்கு வருவதை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.!

அதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் ‘நாதமுனி’ திரையரங்கில் தளபதி அவர்களின் லியோ  பிரம்மாண்ட கட் அவுட் திறக்கப்பட்டு மேலும் நலத்திட்ட உதவிகளாக பெண்களுக்கு தையல் இயந்திரம், அரிசி, புடவைகள் மற்றும் குடங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை மாவட்ட தலைவர், மாவட்ட நிர்வாகிகள், வில்லிவாக்கம் மேற்கு பகுதி வட்ட, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்’’ என்று தெரிவித்துள்ளார்.