1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 18 அக்டோபர் 2023 (17:46 IST)

காவிரி நீரை கேட்டால் ‘லியோ’ படத்தை திரையிட மாட்டோம்: வாட்டாள் நாகராஜ்

vattal nagarajan
காவிரி நீரை தமிழகத்திற்கு கேட்டால் லியோ திரைப்படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலம் இடையே காவிரி பிரச்சனை கடந்த சில வாரங்களாக  உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை கர்நாடக மாநிலம் திறந்து விட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில் கர்நாடக மாநில அரசு தண்ணீர் திறந்து விட முடியாது என பிடிவாதமாக உள்ளது.

இந்த நிலையில் வாட்டாள் நாகராஜ் உட்பட பல அமைப்புகள் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் பந்த் நடத்தினார் என்பது  தெரிந்ததே.  இந்த நிலையில் காவிரி நீரை தாருங்கள் என்று தமிழக அரசு கேட்டாலோ அல்லது போராட்டம் வெடித்தாலோ கர்நாடகாவில் லியோ படத்தை திரையிட விட மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran