1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 18 அக்டோபர் 2023 (16:15 IST)

புதுவையில் 'லியோ' படத்தின் காலை 7 மணி காட்சி ரத்து...ரசிகர்கள் அதிர்ச்சி

leo vijay
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் வரும் (அக்டோபர் 19 ஆம் தேதி) நாளை ரிலீஸாகவுள்ளது.

இப்படம்  மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் வெளியாகும் நிலையில், தமிழகத்தில்  காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் காலை 7 மணிக்கு லியோ திரைப்படம்  திரையிட மாவட்ட ஆட்சியர் வல்லவன் அனுமதி அளித்திருந்தார்.

புதுச்சேரியில் லியோ படத்தை காலை 7 மணிக்கு திரையிட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இப்படத்தை தியேட்டர் உரிமையாளர்கள் முன்வரவில்லை என தெரிகிறது.

எனவே நெருக்கடிகளை தவிர்க்க புதுச்சேரியிலும், 10  மணிக்கு மேல் படத்தை திரையிட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.  

ஆனால், காலை 7 மணிக்கு திரையிட வேண்டுமென விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் ரோகினி மற்றும் வெற்றி திரையரங்குகளில்  லியோ பட டிக்கெட் முன்பதிவும் செய்யவில்லை.. லியோ படம் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.