வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (17:26 IST)

பாஸிடிவ்தான் பாஸ் பலமே... காஜல் அகர்வால் அட்வைஸ்

நல்ல விஷயங்களை பேசுவேன். மற்றவர்ளை பற்றி மோசமாக பேசுவதும் அப்படி பேசுபவர்களை ஊக்குவிப்பதும் தவறு என்கிறார் நடிகை காஜல் அகர்வால். 
 
இயக்குநர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் பாரிஸ் பாரிஸ் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், விஜய் அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். பாலிவுட்டில் கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட குயின் படத்தின் ரீமேக்கே பாரிஸ் பாரிஸ். ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்குப் படம் தயாராக இருக்கிறது. 
 
சமீபத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ள காஜல், சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறேன். அதற்கு என் பணத்தையே செலவிடுகிறேன். ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதிக்கு சென்றபோது அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் இல்லாமல் அவதிப்படுவதை பார்த்தேன். இதனால் நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து இருக்கிறேன். நல்ல விஷயங்களை பேசுவேன். மற்றவர்ளை பற்றி மோசமாக பேசுவதும் அப்படி பேசுபவர்களை ஊக்குவிப்பதும் தவறு என்கிறார் பாஸிடிவ் காஜல்.