என்ன பாரதிராஜா பட ஹீரோயின் போல ஆயிட்டாங்க… ஜான்வி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
ஆனாலும் தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே அவர் இங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார். அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள்தான்.
வழக்கமான மாடர்ன் உடையில் வளைய வரும் ஜான்வி கபூர், பழங்கால தென்னிந்திய பெண்கள் போல ஜாக்கெட் அணியாமல் சேலை மட்டும் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன.