செவ்வாய், 25 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:15 IST)

பிரான்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட துணிவு திரைப்படம்… போனி கபூர் பெருமிதம்!

சமீபத்தில் ரிலீஸ் ஆன அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை உலகம் முழுவதும் பெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான அஜித்- வினோத் கூட்டணியின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வழக்கமாக வெளிநாடுகளில் அஜித் படத்துக்குக் கிடைக்கும் வசூலை விட இந்த படத்துக்கு அதிகளவில் வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், பிரான்ஸில் துணிவு படத்தின் காட்சிகளைப் பற்றி விவாதங்கள் நடந்துள்ளது. அது சம்மந்தமான கிளிப்பிங்களை அஜித் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பரப்ப அதைப் பகிர்ந்துள்ள போனி கபூர் ”இது ஒரு பெருமிதமான உணர்வு” என்று பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.