அஜித் குடும்பத்தில் ஏற்பட்ட சோகம்! பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்!

Last Updated: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (17:04 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அவருக்கு ஏதேனும் ஒன்னென்றால் கொதித்தெழுந்து விடுவார்கள்.


 
நடிகர் அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் நாளை தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார் அஜித். அதற்காக அவரது ரசிகர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். 
 
மேலும் அவரது பிறந்த தினத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் அப்டேட் ஏதேனும் வரும் என்றும் யூகித்திருந்தனர். இந்நிலையில் தற்போது நாளை பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் அஜித்தின் வீட்டில் சோகமான காரியம் ஒன்று நடந்துள்ளது. 
 
இந்த செய்தி அஜித்தை ரசிகர்களை மிகுந்த வருத்தமடைய வைத்துள்ளது. அது என்னவென்றால், அஜித்தின் தந்தை சுப்ரமணியத்திற்கு தற்போது உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறதாம் எனவே அவர் சீக்கிரம் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள். 


 
நெருங்கிவரும் அஜித்தின் பிறந்தநாளில் அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த சோகமான காரியத்தால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மனவேதையில் உள்ளனர். இருந்தாலும் இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 


இதில் மேலும் படிக்கவும் :