புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (14:47 IST)

அது உங்கம்மா! அஜித் ரசிகரை மோசமாக விளாசிய ஓவியா!

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஆஹா ஓஹோன்னு பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா தான். மனதில் பட்டத்தை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசியும். மிகவும் நேர்மையாக நடந்துகொண்டதாலும் மக்கள் அனைவருக்கும் இவரை பிடித்துவிட்டது. 



 
அந்நிகழ்ச்சியில் இருக்கும்போது மற்றவர்களை பற்றி கவலைப்படாத ஓவியா, தன்னைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தாலும் அதை பற்றி கண்டுகொள்வதுமில்லை. அவ்வளவு நேர்மையாக நடந்துகொண்டதால் மக்களுக்கு இவரை மிகவும் பிடித்துவிட்டது. பிக் பாஸில் கிடைத்த புகழை வைத்து சமீபத்தில் ஓவியா 90Ml திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு ரசிகர்கள் பலரும் கடும் விமர்சனத்தை தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஓவியா டுவிட்டரில் லைவ் சாட்டில் உரையாடினார் அப்போது ரசிகர் ஒருவர் ‘என்னை திருமணம் செய்து கொள்வீர்களா’ என்று கேட்டார். அதற்கு அஜித் ரசிகர் ஒருவர் ஐட்டமை  திருமணம் செய்து என்ன செய்ய போகிறீர் என்று கேட்ட, கொதித்தெழுந்த ஓவியா  ‘ஐட்டம் உங்க அம்மாதான்’ என்று கூறி  மிக மோசமாக பதில் அளித்திருந்தார். 

அஜித் புகைப்படத்தை வைத்திருந்த அந்த நபரை ஓவியா இப்படி திட்டியிருப்பது அஜித் ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியுள்ளது.