பாட்டு பாடி சென்னை போலீசுக்கு நன்றி சொன்ன நடிகை ஆண்ட்ரியா - வீடியோ!

Papiksha Joseph| Last Updated: புதன், 13 மே 2020 (15:40 IST)

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வீட்டில் அனைவரும் பொறுப்புடன் இருந்து வருகிறோம். இன்னும் சிலர் இந்த ஊரடங்கில் பண ரீதியாக பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தேவையான நிதி உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் சிலர் இந்த நேரத்தில் கண் எதிரே தோன்றும் தெய்வமாக நம் அனைவரையும் பாதுகாக்க போராடிக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகை நடிகை ஆண்ட்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை காவல்துறைக்கு பாட்டு பாடி வித்யாசமாக நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் பேசியுள்ள அவர்
“நீங்கள் நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் மிகவும் கடினமாக உழைக்கிறீர்கள்.எனவே, நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மிகப்பெரியநன்றி. தயவுசெய்து நம்பிக்கையை இழக்காதீர்கள் எல்லாம் சரி ஆகிவிடும் என்று நம்புகிறோம், காத்திருப்போம்” என கூறி காவல்துறையினரின் சேவையை வெகுவாக பாராட்டியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :