1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : சனி, 27 மே 2017 (16:34 IST)

கண்கள் பனித்தது ; இதயம் இனித்தது - விஷாலுடன் மீண்டும் இணைந்த வரலட்சுமி

நடிகர் விஷால் நடிக்கவுள்ள புதிய படத்தில், நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி நடிக்க இருக்கிறார்.


 

 
நடிகர் விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் எனவும் சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது. பல சினிமா விழாக்களில் அவர்கள் இருவரும் இணைந்தே கலந்து கொண்டனர். இதை விஷாலும் உறுதி செய்திருந்தார்.
 
அந்நிலையில், அவர்களுக்கிடையே எற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரின் காதலும் முறிந்து போனது. கடந்த சில மாதங்களாக அவர்கள் இருவரையும் இணைத்து எந்த செய்தியும் வரவில்லை.
 
இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ள சண்டைக்கோழி2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். இந்நிலையில்தான் வேறு ஒரு முக்கிய காதாபத்திரத்திற்கு வரலட்சுமியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
எனவே இப்படத்தின் மூலம் முறிந்து போன காதலை, விஷாலும் வரலட்சுமியும் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசிக்  கொள்கிறார்கள்.