விஸ்வாசம்: எல்.இ.டி கட் அவுட்டில் ஜொலிக்கும் தல அஜித்!

Last Updated: புதன், 9 ஜனவரி 2019 (11:22 IST)
எல்.இ.டி கட் அவுட்டில் அலங்கரிக்கப்பட்ட அஜித்தின் விஸ்வாசம் பேனர் மின்னல் போன்று ஜொலிக்கிறது . 


 
ஜனவரி 10ம் தேதி அதாவது நாளை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்காக அஜித்தின் ரசிகர்கள் டிக்கெட்களை  முன்பதிவு செய்து அஜித்தை திரையில் காண மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கின்றனர். இத்திரைப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளதால் படத்தின் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. 
 
தற்போது இதற்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அஜித்தின் ரசிகர்கள் விஸ்வாசம் வெளியாகும் திரையரங்குகளில் பேனர்களாலும் கட் அவுட்களாலும்  அஜித் அவர்களை அலங்கரிக்க தொடங்கிவிட்டனர். 
 
அந்தவகையில் சேலம் ஓமலூரில் அஜித்திற்கு “எல்.இ.டி” கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதில் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் மாறி, மாறி வரும்படி செய்துள்ளனர் . 


இதில் மேலும் படிக்கவும் :