புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 ஜனவரி 2019 (11:35 IST)

நடிகை மரணத்தில் திடீர் திருப்பம்: சூடுபிடிக்கும் விசாரணை

பிரபல ஒடியா தொலைக்காட்சி  நடிகை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து மரணமடைந்த வழக்கில் அவரது கணவர் குற்றவாளியாக இருக்ககலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஒடியா மொழி நடிகை லக்ஷ்மிபிரியா பெக்ரா என்கிற நிகிதா(32) கடந்த வெள்ளிக்கிழமை கட்டாக்கில் மாடியில் இருந்த திடீரென தவறி விழுந்து சம்பவ இடத்திலே பலியானார். இது அவரது குடும்பத்தாரையும், ஒடியா திரைத்துரையினரையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
 
நிகிதாவின் பெற்றோர், மருமகன் லிபின் சாபுவும் அவரது குடும்பத்தாரும் தனது மகளை கொடுமைபடுத்தி வந்ததாகவும், மகள் நிகிதாவை அவரது கணவர் லிபின் தான் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததாக போலீஸிடம் கூறியுள்ளனர். 
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.