செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (19:24 IST)

திருமண அழைப்பிதழுடன் அலையும் விஷால்??

நடிகர் விஷாலுக்கு திருமணம் எப்பொழுது என பலர் எத்தனை முரை கேள்வி கேட்டாலும் சலிக்காமல் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டப்பட்டதும் அங்குதான் திருமணம் என பதிலளிக்கிறார். 


 
 
மறுபுறம் நடிகை வரலட்சுமியுடன் காதல் அவருடன்தான் விஷாலுக்கு திருமணம் என பல செய்திகளும் வெளியாகி கொண்டுதான் இருக்கிறது. 
 
ஆனால், விஷால் நடிப்பு, தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பு மற்றும்  நடிகர் சங்க பொருப்புகள் என மிகவும் பிசியாக இருக்கிறார். தற்போது திருமண அழைப்பிதழுடன் அலைய துவங்கியுள்ளாரம். 
 
விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவின் திருமணம் வரும் 27 ஆம் தேதி  சென்னையில் நடைபெறவுள்ளது. இதனால் அனைவரையும் திருமணத்திற்கு அழைக்க பத்திரிக்கை கையுமாக அலைகிறாராம்.