1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (12:36 IST)

கள்ளக்காதலனையே மகளுக்கு திருமணம் செய்ய முயன்ற தாய்: மறுத்த இளம்பெண்ணின் பரிதாப நிலை!

கள்ளக்காதலனையே மகளுக்கு திருமணம் செய்ய முயன்ற தாய்: மறுத்த இளம்பெண்ணின் பரிதாப நிலை!

சென்னையில் கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் வழிமறித்து தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனை மறுத்த அந்த பெண்ணை அவர் கத்தியால் கழுத்தை அறுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சென்னை துரைப்பாக்கம் அருகே சுமதி என்பவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது 20 வயதான மகள் இந்துமதியுடன் தனியாக வசித்து வந்தார். இந்துமதி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் தாய் சுமதிக்கும் ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த 37 வயதான சத்தியநாரயணனுக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
 
இதனை இந்துமதி பலமுறை கண்டித்தும் தனது கள்ளத்தொடர்பை தாய் சுமதி விடவில்லை. திருமணம் ஆகாத சத்தியநாராயணன் இரவு நேரங்களில் பலமுறை சுமதியின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது பலமுறை தூங்கிக்கொண்டிருக்கும் இந்துமதியிடமும் அவர் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
 
இதனை ஆரம்பத்தில் தாய் சுமதி எதிர்த்துள்ளார். ஆனால் உனது மகள் இந்துமதியை எனக்கு திருமணம் செய்து கொடுத்துவிடு, நாம் மூன்று பேரும் சேர்ந்து ஒரே வீட்டில் ஜாலியாக இருக்கலாம் என சத்தியநாரயாணன் கூற அதற்கு சுமதி சம்மதம் தெரிவித்துள்ளார்.
 
இதனை சுமதி இந்துமதியிடம் கூற அவர் மறுத்துவிட்டார். தாய் கள்ளத்தொடர்பில் இருப்பவரை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என தூது வந்தவர்களிடமும் கூறி அனுப்பிவிட்டார் இந்துமதி.
 
இதனால் ஆத்திரமடைந்த சத்தியநாராயணன் நேற்று கல்லூரிக்கு சென்ற இந்துமதியை வழிமறித்து தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். இதற்கு இந்துமதி மறுப்பு தெரிவிக்க மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுக்க முயன்று பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
 
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின்னர் மணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.