திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 16 செப்டம்பர் 2021 (18:25 IST)

''வரி செலுத்திய நடிகர் விஜய்''....அரசு நீதிமன்றத்தில் தகவல்

சொகுசுக் காருக்கான நுழைவு வரியை நடிகர் விஜய் செலுத்தியதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய் 2012ம் ஆண்டில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு மனு அளித்த நிலையில் சமீபத்தில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், ரோல்ஸ் ராய்ஸ்  என்ற சொகுசுக் காருக்கான நுழைவு வரியை நடிகர் விஜய் செலுத்தியதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.