1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (20:08 IST)

பிரபல நடிகருக்கு நடுராத்திரியில் செம சர்ப்ரைஸ் கொடுத்த மகள்கள்!

தமிழ் சினிமாவின் பெயர்போன நட்சத்திர குடும்பங்களில் ஒன்று விஜயகுமாரின் குடும்பம். பழமைவாய்ந்த மிகச்சிறந்த நடிகரான விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். அவரது குடும்பத்தில் உள்ள ஒரே மகன் அருண் விஜய்.
இதில் வனிதாவை தவிர மற்ற மகள்கள் அனைவரும் அப்பா விஜயகுமார் மீது பாசமாக இருப்பார்கள். அதை வெளிப்படுத்தும் வகையில் நேற்று தனது 78வது பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விஜயகுமாருக்கு மகள்கள் செம சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி வீட்டில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். பேரக்குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகுமாரின் அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது.