ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 11 ஆகஸ்ட் 2021 (17:22 IST)

நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு உதவிய விஜய்சேதுபதி

நடிகர் ஜி.வி.பிரகாஷிற்கு நடிகர் விஜய் சேதுபதி உதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் தற்போது லாபம் என்ற படத்திலும் சன் தொலைக்காட்சியில் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்  ஜிவி பிரகாஷ்குமார் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துவரும்  படத்திற்கு இடி முழக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது

இப்படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார் . வழக்கம் போல் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுதுகிறார்.

இப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.#IdiMuzhakkam #இடிமுழக்கம்