வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (13:16 IST)

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு! – வேலையாட்களிடம் விசாரணை!

Vijay Yesudas
பிரபல பிண்ணனி பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிப் படங்களில் பிண்ணனி பாடல்களை பாடியுள்ளவர் விஜய் யேசுதாஸ். இவரது வீடு சென்னை அபிராமிபுரத்தில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவரது வீட்டில் சுமார் 60 பவுன் தங்க, வைர நகைகள் மாயமாகி உள்ளதாக விஜய் யேசுதாஸின் மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

நகைகள் மாயமாகி சில மாதங்கள் ஆகிவிட்டதாகவும் சமீபத்தில்தான் நகைகள் மாயமானது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டு பணியாட்கள் மேல் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ள நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் பிரபல நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடுபோன சம்பவத்தில் அவ்வீட்டு வேலைக்கார பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K