செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 மே 2020 (17:28 IST)

கொரோனாவால் சம்பளத்தை குறைத்துக் கொண்ட நடிகர்! எல்லோரும் பின்பற்றலாமே!

கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது அடுத்த மூன்று படங்களின் சம்பளத்தை 25 சதவீதம் குறைத்துக் கொண்டுள்ளார்.

இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வெற்றிப் படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. இவர் இப்போது தமிழரசன், அக்னி சிறகுகள் மற்றும் காக்கி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் 50 சதவீதத்துக்கு மேல் படப்பிடிப்பு முடிந்து கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே நிற்கின்றன.

இந்நிலையில் கொரோனாவால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. அதை ஏற்ற விஜய் ஆண்டனி தனது 3 படங்களின் சம்பளத்தில் இருந்தும் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரின் அக்னி சிறகுகள் படத்தின் தயாரிப்பாளர் டி சிவா விஜய் ஆண்டனியைப் பாராட்டியுள்ளார்.