வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 5 மே 2020 (13:18 IST)

வாழவைக்கும் தெய்வம் விஜய் ஆண்டனி... தனக்கு சம்பளம் வேண்டாம் என அறிவித்த முதல் நடிகர்!

இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்து பின்னர் ஹீரோவாக அவதாரமெடுத்து அதில் வெற்றிகண்ட சிலருள் நடிகர் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவர் தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி என மூன்று படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு ரிலீஸ் நோக்கி விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நேரத்தில் தான் கொரோனா ஊரடங்கு அத்தனையும் முடக்கிவிட்டது.

இதனால் இப்படங்களில் பணியாற்றிய தொழிலார்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு தாமாகவே முன்னவந்து.  இந்த படங்களுக்காக தான் ஒப்புக்கொண்ட சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதன் முலம் மற்ற முன்னணி நடிகர்களுக்கு விஜய் ஆண்டனி ஒரு எடுத்துக்காட்டாக விளக்கியிருக்கிறார்.

அவரது இந்த செயலின் மூலம்,  மூன்று பட தயாரிப்பாளர்களும் அவர்களது படங்களின் மொத்த பட்ஜெட்டை குறைத்து, எந்த பிரச்சனைகளும் இல்லாமல் கூடிய விரைவில் படத்தை வெளியிட முடியும் என்று நடிகர் விஜய் ஆண்டனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நடிகர்களும் மனிதாபிமானத்தோடு இவ்வாறு நடந்துகொண்டால் ஓரளவிற்கு பணப்பிரச்சனை நீங்கி பல தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் என விஜய் ஆண்டனியை குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.