கருடன் ரிலீஸில் ஏற்பட சிக்கல்… பொறுப்பை ஏற்றுக்கொண்டு உதவிய சூரி!
கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இந்த படத்தினால் அதுவரை நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சூரி, ஹீரோவாகிவிட்டார்.
இதற்கிடையில் சூரி ஹீரோவாக நடித்துள்ள கருடன் என்ற திரைப்படம் மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனது முதல் படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. இதனால் படத்தின் வசூலும் அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸின் போது கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளது. அப்போது நடிகர் சூரிதான் அதற்கு பொறுப்பேற்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்து படத்தின் ரிலீஸூக்கு உதவினாராம். அதனால்தான் படம் ரிலீஸாகியுள்ளது. இப்போது படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.