வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 மே 2021 (17:56 IST)

பிரபல கிரிக்கெட் வீரருக்கு உதவிய நடிகர் சோனு சூட்

பிரபல கிரிக்கெட் வீரரின் டுவிட்டர் பதிவு பார்த்து உடனே உதவியுள்ளார் நடிகர் சோனுசூட்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது, புலம்பெயர் மக்கள், தொழிலாலர்கள்,வெளிநாட்டு மாணவர்கள், விவசாயிகள் , ஏழைகள், ஆகியோருக்கு பெரிதும் உதவியர் சோனு சூட்.

சமீபத்தில் கொரொனா நோயாளிகள் 22 பேர் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவர்களைக் காப்பாற்ற வேண்டுமெனக் கேட்டு இரவில் நடிகர் சோனு சூட்டிற்கு ஒரு கால் வந்துள்ளது. உடனே இதுகுறித்து உண்மை நிலவரத்தைக் கேட்டு உண்மைதான் என்ப்தை உறுதி செய்துவிட்டு, உடனே இரவு என்று பாராது தனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டு, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சரி செய்யக் கொடுத்து,22 பேரின் உயிரைக் காப்பாற்றினார். இது நாடு முழுவதும் பேசு பொருளானது.

இந்நிலையில் சென்னை கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் நடிகருமான ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ரெம்டெசிவர் மருந்து தேவை என நடிகர் சோனு சூட்டிற்கு டேக் செய்து கேட்டுள்ளார்.

எனவே ஹர்பஜன் சிங் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்காக நடிகர் சோனு சூட்டிற்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.