ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 24 ஏப்ரல் 2021 (00:18 IST)

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் சோனு சூட்

பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இத்தொற்றிலிருந்து அவர் குணம் அடைந்துள்ளார்.
 


கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதனிடையே கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை செய்த பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது ரசிகர்களும் அவரால் உதவி பெற்றவர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நடிகர் சோனு சூட் கடந்த சனிக்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்டார். எனவே வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 7 நாட்களுக்குப் பிறகு அவர் கொரொனாவிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளார்.

இத்தகவலை நடிகர் சோனுசூட் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் நிறைய பேருக்கு என்னால் உதவி செய்ய முடியாமல் உள்ளதால் நிர்கதியாக இருப்பதுபோல் உணர்கிறேன். எனவே நாம் அனைவரும் இணைந்து பல உயிர்களைக் காப்பாற்றலாம், அதேபோல் மருத்துவ உதவி கிடைக்காதவர்களுக்கும் நாம் உதவலாம் எனத் தெரிவித்துள்ளார்.