செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (14:32 IST)

மிஸ்டர் லோக்கல் படத்தால் ரூ.20 கோடி நஷ்டம் - ஞானவேல் ராஜ்!

நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜ் பதில் மனு. 

 
தமிழில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்துள்ள டான், அயலான் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.
 
இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இந்த படத்திற்கான சம்பள பாக்கியை தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு தராமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தர சொல்லி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என சிவகார்த்திகேயன் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
மேலும் சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது. மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.