செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (11:23 IST)

நாளை வெளியாகும் டாக்டர் டீசர் - வெயிட்டிங்கில் SK ரசிகர்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டீசர் நாளை வெளியாவதை முன்னிட்டு ரசிகர்கள் ஆர்வம். 

 
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. இதனிடையே டாக்டர் படம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். இந்த காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆம், காட்கர் படத்தின் டீசர் நாளை (25 ஆம் தேது) வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே ரசிகர்கள் இதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 
 
அதோடு டாக்டர் படம் தமிழில் வெளியாகும் அதேநாளில் வருண் டாக்டர் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகிறது என்பது கூடுதல் தகவல்.