வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (10:54 IST)

சாதியை ஒழிக்க காதல்தான் செய்யவேண்டும் என்பது இல்லை… நடிகர் சதிஷ் சர்ச்சை பேச்சு!

சினிமா காமெடி நடிகர் சதீஷ் மாணவர்கள் மத்தியில் பேசும்போது சர்ச்சையானக் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

மேடை நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு அறிமுகமானவர் காமெடி நடிகர் சதிஷ். ஆரம்பத்தில் இவர் காமெடிகள் ரசிக்கப்பட்டாலும் பின்னர் காமெடி என்ற பெயரில் எதையாவது உளறுபவர் என ரசிகர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துனர். இந்நிலையில் அவர் தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த விழாவில் பேசும்போது சர்ச்சையான கருத்து ஒன்றைப் பேசியுள்ளார்.

அதில் ‘பண்ணவே கூடாத ஒரு விசயம் இருக்கிறதென்றால் அது லவ். அதனால் படிப்புக் கெடும். கூடுதல் சுமை உருவாகும். சாதி ஒழிவதற்கு காதல் திருமணம் தான் என சொல்வார்கள். காதல் என்றிலலாமல், அண்ணன் தங்கச்சியாக, நல்ல நண்பர்களாக பழகினாலே சாதியை ஒழிக்கலாம்’ எனக் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.