வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (15:01 IST)

ஒரே வார்த்தையில் மீராவுக்கு பளார் பதிலடி கொடுத்த விஜய்யின் நெருங்கிய நண்பர்!

கடந்த சில நாட்களாக ரஜினி, விஜய், சூர்யா உள்பட பல நடிகர்களையும் த்ரிஷா உள்பட ஒருசில நடிகைகளையும் தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் மீராமிதுன். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரசிகர்கள் அவரை ஏக வசனத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்

நேற்று விஜய் மற்றும் சூர்யா மனைவிகளை குறித்து மோசமான கருத்து தெரிவித்து மீரா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அது அவரது தரம் என்ன என்வதை காட்டியதுடன் பலரது மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது விஜய்யின் நெருங்கிய நண்பருக்கும் நடிகருமான சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் ''Ignore Negativity'' என்ற ஒற்றை வார்த்தையில் விஜய்யின் பாணியிலே மீராவிருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். வொர்த்தே இல்லாத நபரின் தரம் தாழ்ந்த செயலை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுத்தள்ளுங்கள் என்பது போல genuine'ஆன இந்த பதிவு விஜய் ரசிகர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.