மீராமிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம்ஷெட்டி: வைரலாகும் வீடியோ
கடந்த சில நாட்களாக ரஜினி, விஜய், சூர்யா உள்பட பல நடிகர்களையும் த்ரிஷா உள்பட ஒருசில நடிகைகளையும் தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் மீராமிது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரசிகர்கள் அவரை ஏக வசனத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் நடிகை சனம்ஷெட்டி இது குறித்து ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: விஜய் போன்ற பெரிய இடத்தில் உள்ள நடிகர்களை விமர்சனம் செய்யும்போது ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் என்றும் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் வாரிசாக சினிமாவுக்கு வந்தாலும் அவர் ஒரே ஒரு வெற்றிக்காக பல வருடங்கள் காத்திருந்ததாகவும், இன்று அவர் இருக்கும் உயரத்திற்கு உங்களுக்கு அவர் பதில் சொல்லத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
மீராவுக்கு பதில் சொல்ல நானே போதும் என்று கூறிய சனம்ஷெட்டி, பெரிய நடிகர்களை பற்றி தவறாக பேசுவதால் நெகட்டிவ் விளம்பரம் கிடைக்கும் என்பது உண்மைதான் என்றும், நீங்கள் எதிர்பார்த்த விளம்பரம் கிடைத்துவிட்டது என்றும் ஆனால் இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்
ஏற்கனவே உங்கள் டுவிட்டர் அக்கவுண்ட் மீது ரிப்போர்ட்டுகள் அதிகமாக இருப்பதாகவும், விரைவில் உங்கள் டுவிட்டர் பக்கம் முடக்கம் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மீரானுக்கு பதிலடி கொடுத்துள்ள சனம்ஷெட்டியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது