வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2020 (14:45 IST)

டோலிவுட் பக்கம் கரை ஒதுங்கும் லோகேஷ் கனகராஜ் கதை??

லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து படம் இயக்க உள்ளார் என புதுவித தகவல் வெளியாகியுள்ளது. 
 
இன்றைய நிலவரப்படி, தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் என்றால் மிகையாகாது. மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
இந்நிலையில் லோகேஷின் அடுத்த படத்தை ரஜினி அல்லது கமல் வைத்து இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என தெரிவிக்கப்பட்டது. லாக்டவுன் காலத்தில் அடுத்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் அவர் என்றும் கூறப்பட்டது.
 
ஆனால் தற்போதைய தகவலின் படி தெலுங்கில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.