செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (18:40 IST)

குழந்தையை கொஞ்சி விளையாடும் விஜய் சேதுபதி - வைரல் வீடியோ

தமிழ் சினிமாவின் வெற்றி கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் சாதாரணமாக உழைத்து இந்த இடத்திற்கு வந்தவர் அல்ல. பெரிய நடிகர், நடிகைகளின் வாரிசுகள் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் முழுக்க முழுக்க தனது திறமையாலும், முயற்சியாலும் முன்னேறி வந்தவர்.

சினிமா மீது இருந்த ஆசையில் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்து அங்கு நடிப்பு கலையை கொஞ்சம் கொஞ்சமாக கற்று தெரிய விஜய் சேதுபதிக்கு ஆரம்பகாலத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எதையும் அசாதாரணமாக எண்ணாமல் அத்தனை வாய்ப்பையும் மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார். தென்மேற்கு பருவ காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தவிர்க்கமுடியாத கதாநாயகனாக வளர்ந்து நிற்கிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி குழந்தையுடன் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த குழந்தையை கொஞ்சி முத்தமிட்டு விளையாடும் வீடியோவை கண்ட ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். மேலும், இது விஜய் சேதுபதியின் தீவிர ரசிகரின் குழந்தை எனவும் கூறப்படுகிறது.