செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 மே 2020 (10:26 IST)

கொரோனாவை தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது - முதல்வர் பழனிசாமி பேச்சு!

கொரோனா ஊரடங்கு முடிய உள்ள நிலையில் தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது பேசிய அவர் “கொரோனாவை தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது. தனிமனித இடைவெளி,மாஸ்க் அணிதல் போன்றவிதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும்; பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்” என கூறியுள்ளார்.