ராயபுரம் தொடர்ந்து முதலிடம்: சென்னை கொரோனா நிலவரம்
சென்னையில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள கொரோனா நிலவரம் குறித்த தகவலை சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதன்படி சென்னையில் 828 கொரோனா நோயாளிகளுடன் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளது. 2ஆம் இடத்தில் கோடம்பாக்கம் மண்டலம் உள்ளது. இங்கு 796 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 3வது இடத்தில் உள்ள திரு.வி.க. நகர் மண்டலத்தில் 622 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது
4வது இடத்தில் உள்ள தேனாம்பேட்டை மண்டலத்தில் 522 பேருக்கும், 5வது இடத்தில் வளசரவாக்கம் மண்டலத்தில் 426 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தண்டையார்பேட்டையில் 362 பேருக்கும், அடையாறில் 267 பேருக்கும், அம்பத்தூரில் 234 பேருக்கும், திருவொற்றியூரில் 118 பேருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது