திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (07:15 IST)

சலார் படத்துக்காக ஐந்து மொழிகளிலும் டப்பிங் பேசிய மகிழ்ச்சியில் பிருத்விராஜ்!

பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸானது. 5 மொழிகளில் வெளியான இந்த டிரைலர் மொத்தம் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இரண்டு நண்பர்கள் எப்படி எதிரிக்ள் ஆனார்கள் என்பதை சொல்லும் கதைக்களமாக முதல் பாகம் இருக்கும் என இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிருத்விராஜ் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளிலும் அவரது கதாபாத்திரத்துக்கு அவரே டப்பிங் பேசியுள்ளதாக தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.