திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (11:08 IST)

KGF 3ல் யாஷ் இருப்பார்… ஆனால் நான் இருப்பேனா?- இயக்குனர் பிரசாந்த் நீல் பதில்!

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகி 1000 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கு மூலமாகவே வசூலித்தது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் முடிவில், மூன்றாம் பாகத்துக்கான முன்னோட்டம் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது இரண்டாம் பாகம் வெளியாகி 1 ஆண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கே ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து இயக்குனர் பிரசாந்த் நீல் பேசியுள்ளார். அதில் “கே ஜி எஃப் மூன்றாம் பாகம் வருவது உறுதி. அதற்கான கதையும் தயார். அதில் கண்டிப்பாக யாஷ் நடிப்பார். நான் இயக்குவேனா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.