யாஷின் அடுத்த படத்தில் இணைகிறாரா சாய்பல்லவி?
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் இன்னும் தனது அடுத்த படத்தை யாஷ் அறிவிக்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. பல மொழி இயக்குனர்கள் யாஷுக்குக் கதை சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில்தான் அடுத்து யாஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கீது மோகன்தாஸ் ஏற்கனவே லையர்ஸ் டைஸ் படத்தை இயக்கி கவனம் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுபற்றி எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் டிசம்பர் 9 ஆம் தேதி யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் யார் என்பது அன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.