வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 27 பிப்ரவரி 2020 (14:05 IST)

நடிகர் பிரசாந்தின் புது அவதாரம்... அடுத்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு !

நடிகர் பிரசாந்தின் புது அவதாரம்... அடுத்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு !

நடிகர் பிரசாந்த், தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அவரது காலக் கட்டத்தைச் சேர்ந்த விஜய், அஜித் போன்றவர்கள் முதல்படத்தில் படத்திலிருந்து வெற்றி கொடுப்பதற்காகப் பத்து படங்கள் காத்துக் கொண்டிருந்த வேளையில் பிரசாந்தின் முதல் படமே ஹிட் அடித்து, அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகர் ஆனார். இந்திய அளவில் சிறந்த இயக்குநர்களான மணிரத்னம் ,ஷங்கர் படங்களில் அப்போதோ நடித்து புகழ்பெற்றார்.
 
இந்நிலையில் சமீப காலமாக வெற்றிப் படங்கள் கொடுக்காமல் இருந்தவர், தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் வெளியான வினைவிதை ராமா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தன் இரண்டாம் வருகையை உறுதி செய்தார்.
 
கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் ரிலீசான ’அந்தாதுன்’ என்ற படத்தின் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றுள்ளார்.
 
எனவே, இப்படத்திற்காக பிரசாந்த் 22 கிலோ வரை எடை குறைத்துள்ளார். இப்படத்தை ஜெயம்ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகிறது. நடிகர் பிரசாந்த் உடல் எடை குறைந்த போட்டோ தற்போது வைரல் ஆகிறது.