புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (17:05 IST)

நூலிழையில் உயிர் தப்பினேன்... இயக்குநர் ஷங்கர் உருக்கமான டுவீட் !!

நூலிழையில் உயிர் தப்பினேன்... இயக்குநர் ஷங்கர் உருக்கமான டுவீட் !!

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது ராட்சத  கிரேன் விழுந்து, 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக அப்படத்தின் இயக்குநர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது. 
 
அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், மிகுந்த மனவருத்தத்தில் இந்த டுவீட்டை பதிவிடுகிறேன். அன்று நடந்த விபத்து பற்றி அதிர்ச்சியில் இருந்தும், எனது உதவி இயக்குநர் மற்றும் குழுவினருக்கான இழப்புகளில் இருந்து  நான் இன்னும் மீளவில்லை ; தூக்கமில்லாத இரவுகளாக உள்ளது. நூலிழையில் நான் உயிர் தப்பினேன். இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நான் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.