வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (10:18 IST)

கமல்ஹாசன் சங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு: திரையுலகில் பரபரப்பு

கமல்ஹாசன் சங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு
கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த படப்பிடிப்பில் திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக 3 பேர் பரிதாபமாக பலியாகினர் 
 
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கிரேன் ஆபரேட்டர் அஜாக்கிரதை காரணமாகத்தான் இந்த விபத்து நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இருப்பதாகவும் தெரிகிறது 
 
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை செய்ய கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் தரப்பில் முடிவு செய்திருப்பதாகவும் அதுமட்டுமின்றி இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியன் 2’விபத்து குறித்து கமல் மற்றும் ஷங்கரிடம் விசாரணை செய்ய சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்து இருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது