திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 14 மார்ச் 2018 (20:04 IST)

ஸ்டீபன் ஹாக்கிங் புகழ் வாழும்: கமல்ஹாசன் கருத்து

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் புகழ் உலக மக்கள் அனைவரிடமும் வாழும் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் தெரிவித்துள்ளார்.
 
இங்கிலாந்தை நாட்டை சேர்ந்த 76 வயதாகும் பிரபல இயற்பியல் விஞ்ஞானி  ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் இன்று மரணமடைந்தார். 1963ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். ஆனாலும், அவரின் புத்திக்கூர்மை மங்கவில்லை. 
 
அவரின் மறைவிற்கு, உலகம் முழுவதிலும் உள்ள சக விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
 
”ஸ்டீபன் ஹாக்கிங் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம். அவர் புகழ் வாழும்” என்று பதிவிட்டுள்ளார்.